தூங்காத இரவுகள் தரும் துயரம்
தூங்காத இரவுகள் தரும் துயரம் நன்றி - அ. உமர் பாரூக் நம்மைச் சுற்றி ரசாயனப் பயன்பாடு மிக அதிகமாக இருக்கும் போது நம்மை நாம் எவ்வாறு பாதுகாப்பது. ஒவ்வொரு உணவாக ஆய்வு செய்து அதிலிருக்கும் ரசாயன நஞ்சுகளை அறிந்து கொண்டு நாம் என்னதான் செய்வது. இயற்கை நம் உடலிற்கு வழங்கியுள்ள, ரசாயனங்களை அழிக்கும் ஆற்றலைப் பயன்படுத்தி நாம் உண்ணும் உணவுகளின் நச்சுக் கலப்பிலிருந்து நம்மை காக்கலாம். உடலிற்குள் வரும் ரசாயனங்களை கண்டுபிடித்து அவற்றை நீக்கும் வேலையை செய்யும் கடவுள் யார் தெரியுமா... கல்லீரல் தான். குடிக்கும் தண்ணீர், சுவாசிக்கும் காற்று மற்றும் உணவின் வழியாக உடலுக்குள் நுழையும் ரசாயனங்களை அழிக்கும் சக்தி படைத்தது தான் கல்லீரல். உடலின் ராஜ உறுப்புகளில் ஒன்றான கல்லீரலை இப்போது இருப்பதை விட இன்னும் பல மடங்கு பலத்தோடு வைத்துக் கொண்டால் தானே நஞ்சுகளில் இருந்து தப்ப முடியும். அதற்கான வழிமுறைகள் எதுவும் இருக்கிறதா என்றால், நம் முன்னோர்கள் கடைபிடித்த முறையான வழி அது. ரசாயனங்களை அழிப்பதற்கான உடலியல் வழிகள் பல இருந்தாலும் முக்கியமானது... - சரியான நேரத்தில் துாங்குவது. இரவுக் காவலன் சரியான நேரம்