Posts

Showing posts with the label #vijay

விஜய் மகன் பகிர்ந்த ஃபோட்டோவால் குழம்பும் ரசிகர்கள்...என்ன சொல்ல வருகிறார் சஞ்சய்

Image
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில்  பகிர்ந்துள்ள ஃபோட்டோவைபார்த்து விட்டு, இதை எதற்காக இப்போது பகிர்ந்துள்ளார். என்ன சொல்ல வருகிறார் என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர். தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருப்பவர் விஜய். இவரது மகன் சஞ்சய் லண்டனில் படித்து வருகிறார். சினிமா தொடர்பாக படித்து வரும் இவர், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு அப்பா விஜய்யுடன் ஆடி, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். விஜய் மகனின் குறும்படம் படம் இயக்குவது பற்றி படித்து வந்தாலும், நடிப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளார் சஞ்சய். இவர் 2018 ம் ஆண்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜங்ஷன் என்ற குறும்படம் ஒன்றை இயக்கினார். இதிலும் அவரும் நடித்திருந்தார். அந்த சமயத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படமும் வந்ததால் இந்த தகவல் பெரிய அளவில் பேசப்பட்டது. பாராட்டை பெற்ற சஞ்சய் ஏழு நிமிடங்கள் ஓடும் ஜங்ஷன் படம் கல்லூரியில் நடைபெறும் ராகிங் பற்றியதாகும். அதிகமானவர்கள் பார்த்து விட்டு, சஞ்சய்யின் டைரக்ஷன் திறமையை பாராட்டினர். இதனால் சஞ்சய் படிப்பை முடித்த பிறகு தனது தந...