விண்வெளியில் பஞ்சு போன்று மிதந்து கொண்டிருந்த சனி கிரகத்தின் ஹைபெரியன் நிலவின் படங்கள்
நமது சூரிய குடும்பத்தில் 6-வது கோளாக அமைந்துள்ள சனி கிரத்திற்கு 62 நிலவுகள் உள்ளது. இந்த சனிகிரகத்தை ஆராய நாசா காசினி விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியிருந்தது. தற்போது இந்த விண்கலம் சனி கிரகத்தின் ஹைபெரியன் நிலவை படம் பிடித்துள்ளது. உருளைக்கிழங்கு போன்ற வடிவத்தை கொண்டுள்ள இந்த நிலவு விண்வெளியில் பஞ்சு போல மிதந்து கொண்டிருந்தது .ஹைபெரியன் நிலவில் இருந்து வெளிவந்த மின்னோற்றம் பெற்ற துகள்களால் இந்த விண்கலத்திற்கு 200 வோல்ட் மின் அதிர்ச்சி ஏற்பட்டது. சனியின் காந்த புலம் காரணமாக இந்த நிலவு மின்னியல் சார்ஜ் பெற்று மின்னூட்ட துகள்களை வெளியேற்றியது.
Comments
Post a Comment