அன்று
மிளகு வாங்க வந்தவனிடம். நாட்டை
மீட்டெடுக்கவே இரு நூறு ஆண்டுகள் ஆனது.
இன்று
விற்க வந்துள்ளான் நாட்டினுள்.
விதையில்லா பழத்திலிருந்து விடி விளக்கு வரை.
பற்பசையிலிருந்து பல் போன கிழவியின் பல் வரிசை வரை.
குழந்தை உணவிலிருந்து குமரி நகப்பூச்சு,முகபூச்சு வரை.
மண் உரம் முதல் மின்னனு வரை  எங்கும் அன்னிய தயாரிப்புகள்.
மாட்டிக்கொண்டோம் .
நாட்டை மீட்டெடுப்பது எப்பொழுது. ஆகையால்
எண்ணி துணிக கர்மம்.


காவேரி ,கங்கை என பெண் பெயர்களை ஆறுகளுக்கு ஏண் வைத்தார்கள் தெரியுமா?

பெண் தன் பிறப்பில்
ஒருவனுக்கு குழந்தையாய்,
மற்றொருவனுக்கு மனைவியாய்,
தன் மகனுக்கு தாயுமாய் வாழ்வாள்.
அவ்வாரே ஆறும் ஒரு இடத்தில் தோன்றி,மறு இடத்தில் வாழ்ந்து,மற்றொரு இடத்தில் கடல் புகும்.
இதனால் தான் அன்றி.நாம் இன்று அடுத்தவனுக்கு தாரை வார்போம் என்று,
ஆறுகளுக்கு பெண் பெயர் வைக்கவில்லை அன்று.
அயல்நாட்டு குளிர்பான நிறுவனத்துக்கு தன்னீரை தாரைவார்த்து விட்டு.
உள் நாட்டில் குடி தன்னீருக்கு குடும்பி பிடி சண்டை ஏண்?ஆகையால்
எண்ணி துணிக கர்மம்.


வாழ்வியல் முறையிலிருந்து வான சாஸ்திரம் வரை

வகுத்து வாழ்ந்த வம்சாவளியில்
வடக்கு,தெற்கு தெரியாத
வழி தோன்றல்கள் நாம்.
விளக்கு வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு
விளக்கு நோக்கி பயணித்து
விளக்கில் விழுந்து சாகும்
விட்டில் பூச்சியாய் நம் வாழ்க்கை. ஆகையால்
எண்ணி துணிக கர்மம்.



Comments

Popular posts from this blog

The Cancer Dies When You Eat These Five Foods, It’s Time To Start Eating Them

Childhood poverty linked to brain changes related to depression

MEDITATION ON BREATHING