வெந்நீரில் குளித்தால் ஆண்மைக்குறைவு வருமா?
வெந்நீரில் குளித்தால் ஆண்மைக்குறைவு வருமா? பொதுவாகவே ஆண்களுக்கு விரைப்பை உடலுக்கு வெளியே அமையப் பெற்றிருக்கும். இது மனித ஆண்களுக்கு மட்டுமல்ல, மற்ற ஆண் பாலூட்டிகளுக்கும் பொருந்தும். சில விதிவிலக்குகளும் உண்டு (யானை, நீர்யானை, காண்டாமிருகம் வகையறாக்கள்) இவ்வாறு அமையப் பெற்றதன் காரணம், உடலின் சராசரி வெப்பநிலையான 37- 37.5 °C- ஐ விட விரைப்பையின் வெப்பநிலை 3 முதல் 4 °C வரை குறைவாக இருக்க வேண்டும். இல்லையெனில் உயிரணுக்களின் உற்பத்தி நடைபெறாமல் போய்விடும். நாம் வெந்நீர் ஊற்றிக் குளிப்பது பொதுவாக உடலுக்கு நன்மை தரும் என்றாலும், ஆண்களைப் பொறுத்தவரை அடிக்கடி வெந்நீரில் குளித்தால் அதிக வெப்பநிலை காரணமாக உயிரணுக்களின் உற்பத்தி பாதிக்கப்படும். மற்றபடி ஆண்மைக் குறைவு ஏற்படுவது போலத் தெரிந்தால் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். அதனால், முடிந்த அளவுக்கு சாதாரண வெப்பநிலை கொண்ட நீரில் குளித்தால் நல்லது. உடல் அசதிக்குக் கொஞ்சம் சுடுநீரில் குளித்தால் தேவலை என எண்ணுபவர்கள், மிதமான வெப்பம் கொண்ட நீரில் குளிக்கலாம்.