விஜய் மகன் பகிர்ந்த ஃபோட்டோவால் குழம்பும் ரசிகர்கள்...என்ன சொல்ல வருகிறார் சஞ்சய்

நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஃபோட்டோவைபார்த்து விட்டு, இதை எதற்காக இப்போது பகிர்ந்துள்ளார். என்ன சொல்ல வருகிறார் என ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருப்பவர் விஜய். இவரது மகன் சஞ்சய் லண்டனில் படித்து வருகிறார். சினிமா தொடர்பாக படித்து வரும் இவர், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு அப்பா விஜய்யுடன் ஆடி, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.


விஜய் மகனின் குறும்படம்

படம் இயக்குவது பற்றி படித்து வந்தாலும், நடிப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளார் சஞ்சய். இவர் 2018 ம் ஆண்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து ஜங்ஷன் என்ற குறும்படம் ஒன்றை இயக்கினார். இதிலும் அவரும் நடித்திருந்தார். அந்த சமயத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடித்த ஆதித்ய வர்மா படமும் வந்ததால் இந்த தகவல் பெரிய அளவில் பேசப்பட்டது.

பாராட்டை பெற்ற சஞ்சய்

ஏழு நிமிடங்கள் ஓடும் ஜங்ஷன் படம் கல்லூரியில் நடைபெறும் ராகிங் பற்றியதாகும். அதிகமானவர்கள் பார்த்து விட்டு, சஞ்சய்யின் டைரக்ஷன் திறமையை பாராட்டினர். இதனால் சஞ்சய் படிப்பை முடித்த பிறகு தனது தந்தை விஜய்யை வைத்து படம் இயக்குவார் என பேசப்பட்டது.


சஞ்சய் பகிர்ந்த ஃபோட்டோ

இந்நிலையில் ஜங்ஷன் குறும்படத்தில் தான் நடித்த ஸ்டில் ஒன்றை ட்விட்டரில் தற்போது பதிவிட்டுள்ளார் சஞ்சய். இதை பார்த்து விட்டு ரசிகர்கள் பலரும், தற்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். படிப்பை முடித்து விட்டீர்களா. வேலை பார்க்கிறீர்களா அல்லது வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா என வித விதமாக கேட்டுள்ளனர்.

என்ன சொல்ல வருகிறார்

சஞ்சய் இந்த ஃபோட்டோ மூலம் என்ன சொல்ல வருகிறார். மீண்டும் படம் இயக்க போகிறாரா அல்லது நடிக்க போகிறாரா என கேட்டுள்ளனர். சமீபத்தில் கூட கையில் ஃபோக்கஸ் லைட்டுடன் இருக்கும் ஃபோட்டோ ஒன்றை சஞ்சய் பகிர்ந்திருந்தார். இதனால் சஞ்சய் தனது தாத்தாவை போல் பெரிய டைரக்டர் ஆவாரா அல்லது அப்பாவை போல் ஹீரோ ஆவாரா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

விரைவில் அறிவிப்பா

ஆனால் சில தகவல்களின் படி சஞ்சய் விரைவில் சினிமாவிற்கு வருவார். அவரது படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளதாம். விஜய்யை போலவே அவரது மகனுக்கும் இப்போதே ரசிகர் கூட்டம் இருப்பதால் சஞ்சய்யின் புதிய படம் பற்றிய அறிவிப்பிற்காக அனைவரும் காத்திருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

Childhood poverty linked to brain changes related to depression

Why Is AB Blood Type So Rare? It’s All About The Red Blood Cells

Temple treatment for psychiatric illness