எளிய எலுமிச்சை தரும் பெரிய நன்மைகள், தினமும் எடுத்துக்கொள்ளலாமா
எலுமிச்சையில் விட்டமின் சி இருப்பது நம் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்கும். அது மட்டுமல்ல இன்னும் எண்ணிலடங்காத நன்மைகளை தருகிறது. அதைப் பற்றி இங்கே காணலாம்.
எலுமிச்சை (Lemon Benefits) பழத்தில் விட்டமின் சி (Vitamin C) மட்டுமல்ல நார்ச்சத்து, கால்சியம், பாந்தோத்தேனிக் அமிலம், போலேட், மக்னீசியம் மற்றும் தாமிரம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன.
இவற்றில் கலோரிகள் (Weight Loss) குறைவாக இருப்பதால் இந்த பழத்தை யார் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இவை சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ப்ளோனாய்டுகள் அடங்கியவை ஆகும். அதனால் தான் எலுமிச்சை புற்றுநோய்க்கான வாய்ப்புகளை குறைக்கும் தன்மை வாய்ந்தது.
கல்லீரல் பிரச்சனை நீங்கும்: எலுமிச்சம்பழம் சாப்பிடுவதால் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை நீங்கும். அதன் இயற்கையான சுத்திகரிப்பு திறன் கல்லீரலுக்கு நன்மை பயக்கும். காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு குடிக்கவும். இதனால் உடலில் இருந்து நச்சுகள் வெளியேறி, செரிமான அமைப்பும் சீராக இருக்கும்.
சிறுநீரக கல் பிரச்சனை நீங்கும்: எலுமிச்சையை உட்கொள்வது சிறுநீரக கற்கள் பிரச்சனையில் இருந்தும் பாதுகாக்கிறது. இதில் அதிக அளவு சிட்ரேட் உள்ளது. சிட்ரேட் கால்சியம் படிகங்களை உருவாக்க அனுமதிக்காது.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்: எலுமிச்சம்பழத்தை உட்கொள்வதால் உடலில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகி, நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும். எலுமிச்சையில் பெக்டின் என்ற நார்ச்சத்து உள்ளது, இது ஒரு ப்ரீபயாடிக் ஆகும். இது ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
தோலுக்கு நன்மை பயக்கும்: எலுமிச்சையில் வைட்டமின்-சி நிறைந்துள்ளது, எனவே அதன் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.
அழற்சியை எதிர்த்து போராடுகிறது: சலதோஷம் மற்றும் இருமல் போன்ற அழற்சியை எதிர்த்து போராடுகிறது. அது மட்டுமல்ல காலரா மற்றும் ஈ.கோலை போன்ற நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.)
Comments
Post a Comment