நாளை முதல் “பொங்கல் பரிசு”, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
ஜனவரி 4 அதாவது நாளை பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தமிழக முதல்வர் முக..ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமல்லாது இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்துவரும் குடும்பங்களுக்கும் இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பரிசு தொகுப்பு
சுமார் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் 2.15 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. நியாயவிலைக் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ள இந்தப் பரிசுத் தொகுப்பை பெறுவதற்காக டோக்கன் வினியோகம் தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதற்காக நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கி வருகின்றனர். இந்த டோக்கன்களை வழங்கி பொதுமக்கள் தங்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
டோக்கன் விநியோகம்
பொதுமக்களுக்கு தடையின்றி பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் வகையில் நியாயவிலைக் கடைகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது டோக்கன் வழங்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிக்க அதிகாரிகள்
முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசுத் திட்டத்தினை தொடங்கி வைத்த பின், தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களைஉச் சேர்ந்த அமைச்சர்கள் மக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தினை வழங்கவுள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகள் உணவு வழங்கல் துறை மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கல் மூலமாக செய்யப்பட்டுள்ளன. பரிசுத் தொகுப்புகளை பெற வரும் மக்கள் முகக்கவசம் அணிந்து, தகுந்த தனிமனித இடைவெளியை கடை பிடித்து பெற்றுச் செல்ல வேண்டுமெனவும், அதிகாரிகளும் இப்பணியை முழுமையாக கண்காணிக்க வேண்டுமென அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments
Post a Comment